தேசியம்
செய்திகள்

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

கனேடிய இராணுவத்திற்கு உதவிய அதிகமான ஆப்கானிய பிரஜைகள் மிக விரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் கனடாவின் முயற்சிகளுக்கு ஒருங்கிணைந்த ஆப்கானியர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஒரு சிறப்பு திட்டத்தை கனேடிய அரசு அறிவித்தது.

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் Marco Mendicino, வெளியுறவு அமைச்சர் Marc Garneau, தேசிய பாதுகாப்பு அமைச்சர் Harjit Sajjan ஆகியோர் இணைந்து இன்று இந்த அறிவித்தலை வெளியிட்டனர்.

கனடாவுக்கு உதவ தங்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியவர்களுக்கு உதவ விரைவாக செயல்படுகிறோம் என இந்த அறிவித்தலில் கனேடிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பல துணிச்சலான ஆப்கானியர்கள், கனடாவின் முயற்சிகளுக்கு நம்பமுடியாத அளவு பங்களிப்புகளைச் செய்தார்கள் என தெரிவித்த கனேடிய அரசாங்கம், இவர்களில் பலர் நாட்டின் நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதால், தலிபான்களின் இலக்குகளாக மாறிவிட்டனர் எனவும் தெரிவித்தது.

Related posts

சைபர் தாக்குதலுக்கான எச்சரிக்கை நிலையில் கனடா

Lankathas Pathmanathan

COVID விரைவு சோதனைகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 பில்லியன் மதிப்புள்ள மசோதா

Lankathas Pathmanathan

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

Leave a Comment