தேசியம்
செய்திகள்

1957க்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை எதிர்கொள்ளும் கனடா!

1957ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை கனடா எதிர்கொள்கின்றது.

பெரும்பாலும் புதிய குடியேற்றத்தால் இந்த வளர்ச்சி ஏற்படுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது.

கடந்த July 1ஆம் திகதி தரவுகளின் படி, கனடாவில் வாழும் மக்களின் எண்ணிக்கை 38.9 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த April 1ஆம் திகதியில் இருந்து 0.7 சதவீதம் அதிகரிப்பாகும்.

புள்ளிவிவர திணைக்கள தரவுகளின் படி, சர்வதேச இடம்பெயர்வு இந்த வளர்ச்சியில் 94.5 சதவீதம் ஆகும்.

இந்த மதிப்பீடு, 1957ஆம் ஆண்டின் பின்னர் முதல் காலாண்டு வளர்ச்சியின் அதிகபட்ச வேகத்தைக் குறிக்கிறது.

இது நாளாந்தம் 3,100 பேருக்கு மேல் அதிகரிப்பைக் குறிக்கிறது.

Related posts

தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரத்தில் January 4 முதல் Ontarioவில் மாற்றம்

Lankathas Pathmanathan

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

COVID எதிர்காலத்தில் சவால்களை உருவாக்கும் என்பதை Omicron மாறுபாடு காட்டுகிறது: Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment