September 8, 2026
தேசியம்
செய்திகள்

FIFA: உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது கனடா

FIFA 2026 உலகக் கோப்பை தொடரில் இருந்து கனடா வெளியேறியது.

சனிக்கிழமை (04) கனடா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது..

FIFA 2026 உலகக் கோப்பை தொடரின் round of 16 ஆட்டத்தில் கனடா Morocco அணியை எதிர்கொண்டது.

Houston நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3 க்கு 0 என்ற goal வித்தியாசத்தில் கனடா தோல்வியடைந்தது.

கனடிய அணி இந்தத் தொடர் முழுவதும் மீண்டும் மீண்டும் வரலாறு படைத்தது.

இம்முறை ஆண்கள் தேசிய அணி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் புள்ளியையும் முதல் வெற்றியையும் பதிவு செய்து, முதன் முறையாக knockout சுற்றுக்கு முன்னேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்கிறது.

FIFA அதிகாரப்பூர்வ தரவரிசையில் 7-வது இடத்தில் இருந்த Morocco, 30-வது இடத்தில் இருந்த கனடாவை விட உயர்ந்த நிலையில் இப்போட்டித் தொடருக்குள் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க Buckingham Palace மறுப்பு?

Lankathas Pathmanathan

கனடா: கடந்த மாதம் 2 இலட்சத்து 7 ஆயிரம் வேலைகள் இழக்கப்பட்டன

Gaya Raja

உக்ரேனியர்களை அழிக்க ரஷ்யா விரும்புகிறது: கனடிய நாடாளுமன்றத்தில் உக்ரேனிய ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Leave a Comment