கனடா-அமெரிக்க உறவின் எதிர்காலம் கனடியர்களின் கையில் உள்ளது என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் புதல்வன் கூறினார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Joe Biden-னின் மகன் Hunter Biden கனடிய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இந்த கருத்தை முன்வைத்தார்.
இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள மாற்றம் நிரந்தரமானதா என அவரிடம் கேட்கப்பட்ட போது, “அது கனடியர்களின் கையில் தான் உள்ளது என நான் கருதுகிறேன்” என Hunter Biden தெரிவித்தார்.
கனடாவுடன் மட்டுமல்லாது அமெரிக்காவின் அனைத்து நட்பு நாடுகளுடனான உறவுகளுக்கும் மக்கள் முழுமையாக உணர்ந்திருப்பதை விட Donald Trump அதிகமான நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார் என கருதுவதாக Hunter Biden மேலும் கூறினார்.
இந்த உறவை சரிசெய்யக்கூடிய ஒருவரை அமெரிக்கர்கள் தேர்ந்தெடுப்போம் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வருடம் February மாதம் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடாவுக்கு எதிராக வர்த்தகப் போரை ஆரம்பித்ததிலிருந்து, கனடா-அமெரிக்க உறவில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
