தேசியம்
செய்திகள்

விபத்துக்கு உள்ளானது காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம்

Northwest பிரதேசத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து புதன்கிழமை (24) இரவு, Yellowknife நகருக்கு, Fort Simpson-னிலிருந்து  சுமார் 50 KM தொலைவில் நிகழ்ந்தது.

தாங்கள் அந்த இடத்தைச் சென்றடைய முடிந்ததாகவும், விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் RCMP தெரிவித்துள்ளது.

மூவருடன் பயணித்த இந்த விமானத்தில் இருந்த எவரும்  உயிர் பிழைத்தார்களா என்பதை RCMP உறுதிப்படுத்தவில்லை.

இந்த விசாரணையில் உதவ போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் புலனாய்வாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவிக்கிறது.

விபத்துக்குள்ளான விமானம்  Turbo Commander 960 Bird Dog வகையைச் சேர்ந்தது என கூறப்படுகிறது.

இது பொதுவாக தீயணைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கான வான்வழித் தலைமை மையமாக பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார பதாதைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது?

Lankathas Pathmanathan

சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி பெறவேண்டிய இறுதித் திகதியை தாமதப்படுத்தும் Quebec!

Gaya Raja

Mexico நாட்டவர்களுக்கு மீண்டும் visa தேவைளை நடைமுறைப்படுத்தும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment