தேசியம்
செய்திகள்

கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளோம்: ஐரோப்பிய ஒன்றியம்

கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது

ஏற்கனவே கனடாவுக்கு ஒரு தடுப்பூசி விநியோகத்தை அங்கீகரித்திருப்பதாகவும், தடுப்பூசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் கூறுகின்றது. தனது குடிமக்களுக்கு விரைவில் தடுப்பூசி வழக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளது என்பதை கனடா அறிந்திருக்கின்றது எனவும் ஒரு அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. ஆனாலும் ஏனைய நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளின் விநியோகித்தை தடுக்கும் எண்ணம் இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெளிவு படுத்தியுள்ளது.

தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் வழங்கிய உத்தரவாதங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அறிக்கை உறுதிப்படுத்துகின்றது. கனடா இந்த வாரம் ஐரோப்பாவிலிருந்து எதிர்பார்க்கப்படும் தடுப்பூசி ஏற்றுமதிகளைப் பெற்றுக் கொள்ளும் என இன்று காலை அமைச்சர் அனிதா ஆனந்த் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2022இல் இதுவரை 107 இறப்புகள் Ontario நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளன

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Lankathas Pathmanathan

கூடுதல் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் Manitoba மாகாணம்

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!