கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் புதன்கிழமை (24) தொலைபேசியில் உரையாடினர்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள NATO உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இரு நாடுகளின் தலைவர்கள் உரையாடல் நிகழ்ந்தது.
ஆனாலும் இந்த உரையாடல் குறித்து Mark Carney அலுவலகம் எந்த விபரங்களையும் வெளியிடவில்லை.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து கனடிய பிரதமர் அலுவலகம் ஒரு வாக்கியத்தில் அறிக்கை ஒன்றை மாத்திரம் வெளியிட்டது.
அதில் இரு தலைவர்களும் உரையாடிய விடயங்கள் குறித்த எந்த விபரங்களும் குறிப்பிடப்படவில்லை.
France-சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் Mark Carney-யும் Doanld Trump-பும் இந்த மாதம் சந்தித்தனர்.
ஆனாலும் அவர்களுக்கு இடையில் முறையான உரையாடல் எதுவும் நடைபெறவில்லை.
துருக்கி அதன் தலைநகரில் July 7 முதல் 8 வரை வருடாந்த NATO உச்சி மாநாட்டை நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டிற்கு முன்னதாக, துருக்கிய வெளியுறவு அமைச்சர் Hakan Fidan வியாழக்கிழமை (25) கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது.
