தேசியம்
செய்திகள்

சட்டமாக நிறைவேற்றப்பட்ட Canada Dental Benefit

Canada Dental Benefit எனப்படும் பல் நலன் தொடர்பான மசோதா Senate சபையின் அங்கீகாரத்தை வியாழக்கிழமை (17) பெற்றது.

Bill C-31 எனப்படும் இந்த நலத்திட்டம் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலாவது பல் பராமரிப்பு திட்டத்தை கனடா பெறுகிறது.

பிரதமர் Justin Trudeau NDP தலைவர் Jagmeet Singh இடையிலான ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்த மசோதா உருவாக்கப்பட்டது.

எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆண்டு வருமானம் $90,000 குறைவாக பெறும் குடும்பங்களில் உள்ள 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் பலனளிக்கிறது.

500,000 கனடிய குழந்தைகள் இந்த திட்டத்தில் தகுதியுடையவர்கள் என மதிப்பிடப்படுகிறது.

Related posts

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது!

Lankathas Pathmanathan

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

$58 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு வெற்றியாளர்!

Lankathas Pathmanathan

Leave a Comment