தேசியம்
செய்திகள்

சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும்: சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng

சீனாவுடன் கனடா மரியாதையான உறவைப் பேணும் என கனடிய சர்வதேச வர்த்தக அமைச்சர் Mary Ng தெரிவித்தார்.

சீன ஜனாதிபதிக்கும் கனடிய பிரதமருக்கும் இடையிலான கடுமையான கருத்து பரிமாற்றத்தை தொடர்ந்து, இந்த கருத்து வெளியானது.

உறவுகள் கடினமாக இருந்தாலும் சீனாவுடனான பேச்சுக்களில் மரியாதையை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

இன்று இருக்கும் சீனா கடந்த கால சீனா அல்ல என கூறிய அவர்,  ஆசியாவிலேயே கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனா, மாறிவிட்டது எனவும் எச்சரித்தார்.

சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக வர்த்தகம் தொடர்பாக கனடா சீனாவுடன் சில சிரமங்களை எதிர் கொண்டுள்ளது எனவும்  அவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக ஆசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் புதிய, விரிவாக்கப்பட்ட உறவுகளை பாதுகாப்பதில் கனடா  அதிக நேரத்தை செலவிடுகிறது எனவும் அமைச்சர் Ng கூறினார்.

இதை எதிர்கொள்வதற்கு புதிய இந்தோ-பசிபிக் மூலோபாயத்தை கனடா  உருவாக்கி வருகிறது.

இந்த மூலோபாயம் அடுத்த மாதம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை இடைநிறுத்த வேண்டும்: கனடா வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan

ஐக்கிய நாடுகள் சபையை வழி நடத்த விரும்பும் கனடிய பெண்!

Gaya Raja

Leave a Comment