Ontario மாகாண பாடசாலைகளில் அடுத்த கல்வியாண்டு September மாதம் சற்று தாமதமாக ஆரம்பிக்கின்றன.
Ontario மாகாண பாடசாலைகள் கோடை விடுமுறைக்காக இந்த வாரம் மூடப்படுகின்றன.
மாகாணம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கான பாடசாலைகளின் இறுதி நாள், பாடசாலை வாரியம், அது மேல்நிலைப் பாடசாலையா அல்லது ஆரம்பப் பாடசாலையா என்பதைப் பொறுத்து, புதன்கிழமை (24) முதல் வெள்ளிக்கிழமைக்கு (26) இடையில் அமைகிறது.
இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்கள் September 8-ஆம் திக வரை தங்கள் வகுப்பறைகளுக்கு திரும்ப மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
