தேசியம்
செய்திகள்

2026 FIFA: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்கு கனடிய அணிக்கு 99 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பு?

2026 FIFA உலகக் கோப்பை தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்கு கனடிய அணி 99 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

நான்கு புள்ளிகள், +6 goal வித்தியாசத்துடன், 2026 FIFA உலகக் கோப்பை தொடரில் கனடா அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறுவதற்கு 99 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பைக் கொண்டுள்ளது.

இருப்பினும், புதன்கிழமை (24) B பிரிவு வெற்றியாளரை தீர்மானிக்க சுவிட்சர்லாந்துடன் நடைபெற இருக்கும் முக்கியமான ஆட்டத்திற்கு முன்னதாக, அவர்களின் தரவரிசையும் அடுத்த சுற்றுக்கான எதிரணியும் இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளன.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் Qatar அணியை 6-0 என்ற goal கணக்கில் கனடா வீழ்த்தியது.

புதன்கிழமை ஆட்டத்திற்குள் நுழையும்போது, goal வித்தியாசத்தின் அடிப்படையில் கனடா B பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

மேலும் புதன்கிழமை ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது சமன் செய்தாலோ கனடா தந்து பிரிவில் முதலிடத்தை உறுதி செய்யும்.

B பிரிவில் முதலிடம் பிடிப்பதால் கிடைக்கும் கணிசமான ஓய்வு, கனடிய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என கூறப்படுகிறது.

B பிரிவின் வெற்றியாளர், July 2-ஆம் திகதி தமது அடுத்த ஆட்டத்திற்கு  முன்னதாக, ஒரு வாரத்திற்கும் மேலாக ஓய்வில் இருப்பார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்த ஆட்டத்தில்,B குழுவின் வெற்றியாளரும், E, F, G, I, அல்லது J குழுக்களில் ஏதேனும் ஒன்றில் மூன்றாம் இடம் பிடித்த அணியும் மோதும்.

திங்கட்கிழமை ஆட்டங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்த புள்ளி பட்டியலின் அடிப்படையில் BBC வெளியிட்ட கணிப்பு மாதிரியின் படி, G குழுவில்  தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தை கனடா எதிர்கொள்ளும்.
புதன்கிழமை சுவிட்சர்லாந்திடம் தோற்றால், அன்றிரவு முடிவதற்குள் கனடாவின் 32-வது சுற்றுப் போட்டி அட்டவணையும் எதிரணியும் உறுதியாகிவிடும்.

Related posts

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

பிரதமரின் கருத்தை மறுக்கும் சுகாதார அமைச்சரின் கருத்து

Lankathas Pathmanathan

Ontarioவில் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும்!

Lankathas Pathmanathan

Leave a Comment