September 23, 2026
தேசியம்
செய்திகள்

Billy Bishop விமான நிலையம் குறித்த மத்திய அரசின் பொது ஆலோசனை ஆரம்பம்

Billy Bishop விமான நிலையம் குறித்து மத்திய அரசாங்கம் பொது ஆலோசனைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Toronto Billy Bishop விமான நிலையத்தின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசனைகளை ஆரம்பிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Doug Ford அரசாங்கம், அதிக எண்ணிக்கையிலான பயணிகளையும் jet  விமானங்களையும் கையாளக்கூடிய வகையில் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

இதன் ஒரு பகுதியாக, மாகாண, நகர அரசாங்கங்கள், முதற்குடி மக்கள், NAV கனடா, Toronto துறைமுக ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்ற கனடிய போக்குவரத்துத் துறை உறுதிபூண்டுள்ளது என மத்திய அரசாங்கம் திங்கட்கிழமை (08) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதில் பெறப்படும் கருத்துகள், எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்கும், அனைத்து சமூக உறுப்பினர்களின் நலனுக்காக பாதுகாப்பான, திறமையான, நீடித்த விமான நிலையச் செயல்பாடுகளை ஆதரிப்பதற்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் சில உள்ளூர் குழுக்கள், எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.

Related posts

$80 மில்லியன் Lotto Max வெற்றிச் சீட்டு உங்களுடையதா?

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதி – கனடிய பிரதமர் சந்திப்பு

Lankathas Pathmanathan

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja

Leave a Comment