தேசியம்
செய்திகள்

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான பயணங்களை முன்னெடுக்க வேண்டாம்: ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தல்

கனடாவை வந்தடைவதற்கு ஆபத்தான கடல் பயணங்களை முன்னெடுக்க வேண்டாம் என கனடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி புகலிட கோரிக்கையாளர்களிடன் வலியுறுத்தினார்.

கனடாவை நோக்கி பயணித்ததாக சந்தேகிக்கப்படும் 306 இலங்கை தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சிங்கப்பூர் கடற்படையினரால் திங்கட்கிழமை (07) மீட்கப்பட்டனர்.

மூழ்கிய படகில் இருந்த தமிழர்கள் மீட்கப்பட்ட நிலையில் இவர்கள் வியட்நாம் சென்றடைந்தனர்

இந்த நிலையில் இது போன்ற ஆபத்தான பயணங்களும் அதன் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி நினைவு படுத்தியுள்ளனர்.

தமிழ் அகதிகள் ஆபத்தில் இருக்கக்கூடும் என அறிந்தவுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் எழுதியதோடு, இந்த விடயம் தொடர்பாக கனேடியப் பிரதிநிதியிடம் நேரடியாகப் பேசியதாக ஹரி ஆனந்தசங்கரி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

தமிழ் அகதிகளை வியட்நாமில் தரையிறங்க அனுமதித்த அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மீண்டும் இலங்கைக்கு திருப்பினால் அவர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்ளக்கூடிய நிலையில், வியட்நாம் ஜனாதிபதியின் உதவியைக் கோரி கடிதம் எழுதியுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த தமிழ் அகதிகளின் அவலநிலை கடலில் சோகத்தில் முடிந்திருக்கக் கூடிய அபாயம் குறித்து ஹரி ஆனந்தசங்கரி எச்சரித்தார்

தனது அலுவலகம் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தொடரும் என உறுதியளித்த அவர், UNHCR, வியட்நாம் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

C-18 சட்டம் தொடர்பாக Google நிறுவனத்துடன் கனடிய அரசு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan

Leave a Comment