தேசியம்
செய்திகள்

அமெரிக்க தலைநகரில் Doug Ford

Ontario மாகாண முதல்வர் Doug Ford, Washington, D.C-க்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த பயணத்தின் பிரதான நோக்கம் வர்த்தகம் என முதல்வர் அலுவலகம் தெரிவித்தது.

அவர் திங்கட்கிழமை (08) Ontario வர்த்தக அமைச்சர் Vic Fedeli-உடன் இணைந்து கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் Mark Wiseman-னை சந்தித்தார்.

வட அமெரிக்காவில் வரியில்லா வர்த்தகத்திற்கான தேவையை வலியுறுத்த நாம் எவ்வாறு இணைந்து செயல்படலாம் என்பது குறித்த இந்த சந்திப்பில் ஆராயப்பட்டதாக பிரதமர் அலுவலகம் கூறியது.

இந்த சந்திப்புகளில் Washington-னில் உள்ள Ontario மாகாண பிரதிநிதியான  David Paterson பங்கேற்கிறார்.

திங்களன்று Doug Ford கலந்து கொண்ட எந்த நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அவரது அலுவலகத்தினால் கட்டுப்படுத்தப்படும் சில சமூக ஊடகப் பதிவுகளைத் தவிர இந்த பயணம் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

திங்கள் பிற்பகல், Autos Drive அமெரிக்கா என்ற தொழில் குழுமத்துடனான வட்டமேசை கலந்துரையாடலின் புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் பதிவிட்டது.

திங்கள் இரவு, Doug Ford அமெரிக்க கோடீஸ்வரரும் அமெரிக்க வர்த்தக சபையின் தலைவருமான Ross Perot Jr.-ருடன் இணைந்து ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமைக்கான (09) முதல்வரின் நிகழ்ச்சி நிரல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Olympics: ஆரம்ப விழாவில் Celine Dion இசை நிகழ்ச்சி

Lankathas Pathmanathan

Ontario அமைச்சரவையில் தமிழருக்கு இணை அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan

ஆட்சியில் கவனம் செலுத்த உள்ளேன்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment