தேசியம்
செய்திகள்

Alberta பொது வாக்கெடுப்பு ஒரு உண்மையான பொது வாக்கெடுப்பு அல்ல?

Alberta பொது வாக்கெடுப்பு ஒரு உண்மையான பொது வாக்கெடுப்பு அல்ல என முன்னாள் பிரதமர் Jean Chretien கூறினார்.

Alberta மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பொது வாக்கெடுப்பு குறித்து தனக்கு “கவலை இல்லை” என கனடாவின் 31-வது ஆளுநர் நாயகத்தின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட Jean Chrétien கூறினார்.

இந்த பொது வாக்கெடுப்பு குறித்தும் பிரிவினை குறித்த கேள்வியுடன் கூடிய இலையுதிர் கால பொது வாக்கெடுப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இந்த விடயத்தில் அதிகாரிகள் அதிக அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார்.

கனடாவில் ஒரு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியமானது என Jean Chretien குறிப்பிட்டார்.

Quebec மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட Jean Chrétien, 1995-ஆம் ஆண்டு Quebec பிரிவினை குறித்த பொதுவாக்கெடுப்பின் போது பிரதமராக இருந்தார்.

இந்த பொது வாக்கெடுப்பு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவடைந்தது.

அதில் 49.42 சதவீதம் பேர் பிரிவதற்கும், 50.58 சதவீதம் பேர் கனடாவிலேயே நீடிப்பதற்கும் ஆதரவாக வாக்களித்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்

Gaya Raja

பிரதமரின் முதன்மை செயலரை மேலவைக்கு நியமித்தது தவறானதா?

Lankathas Pathmanathan

கனடாவில் COVID முடிவடையவில்லை: சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos

Leave a Comment