தேசியம்
செய்திகள்

“Walk with Israel” நடைப் பயணத்தில் ஆறு பேர் கைது

“Walk with Israel” வருடாந்த நடை பயண நிகழ்வில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

வார இறுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைதானவர்களில் நடைப் பயண நிகழ்வில் கலந்து கொண்டவர்களும், எதிராக போராட்டங்களை முன்னெடுத்தவர்களும் அடங்குவதாக தெரியவருகிறது.

இதில் இஸ்ரேலுக்கு எதிரான பதாகைகளுடன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை “கேலி” செய்ததாக காவல்துறை கூறும் ஒரு ஆர்ப்பாட்டக்காரர், கருத்து மோதலைத் தொடர்ந்து ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மீது துப்பியதாக கூறப்படும் பாதசாரி ஒருவர் உட்பட பலர் கைதானவர்களில்  அடங்குகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களில் சிலர், தாங்கள் “வெறுப்புத் தாக்குதலுக்கு” உள்ளாக்கப்படலாம் என கவலை தெரிவித்ததை அடுத்து, இந்த வருடாந்த நடைப்பயணத்தில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை முன்னதாக உறுதியளித்திருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (07) North York நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 60,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு முழுவதும், நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கும் ஆர்பாட்டக்கார்களுக்கும் இடையே காவல்துறையினர் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

திங்கட்கிழமை (08) காலை  வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில், அந்தப் பேரணியின்போது மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் ஒரு பங்கேற்பாளர், பல போராட்டக்காரர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை உறுதிப்படுத்தியது.

Related posts

தமிழர் சமூகம் தொடர்பான தேசிய பாதுகாப்பு முடிவுகளில் இருந்து  விலகி இருக்க ஹரி ஆனந்தசங்கரி முடிவு!

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கிலிருந்து ஓமான் வான்வெளி ஊடாக கனடியர்களை வெளியேற்ற திட்டம்?

Lankathas Pathmanathan

துணை பிரதமருக்கு எதிரான கொலை அச்சுறுத்தல் குறித்து சாட்சியம்

Lankathas Pathmanathan

Leave a Comment