தேசியம்
செய்திகள்

தற்காலிக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக கனடா Post ஊழியர்கள் வாக்களித்தனர்

தற்காலிக ஒப்பந்தத்திற்கு ஆதரவாக கனடா Post ஊழியர்கள் வாக்களித்தனர்.

85.9 சதவிகித கனடா Post ஊழியர்கள் தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்துள்ளனர்.

55,000 தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தபால் ஊழியர் சங்கம் (CUPW) இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (01) வெளியிட்டது.

சுமார் 86 சதவீத கிராமப்புற, புறநகர் தபால் ஊழியர்கள் ஒப்பந்தத்தை ஏற்க வாக்களித்ததாகவும், 89 சதவீத நகர்ப்புற ஊழியர்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் தொழிற்சங்கம் தெரிவிக்கிறது.

கனடா Post நிறுவனத்திற்கும் தபால் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடுகளுக்கு இந்த வாக்கெடுப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

December 2025-இல் எட்டப்பட்ட தற்காலிக ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்குத் தங்கள் உறுப்பினர்கள் பெருவாரியாக ஆதரவாக வாக்களித்ததாக CUPW தெரிவித்தது.

Related posts

குழந்தைகள், இளைஞர்களுக்கான பாலினக் கொள்கைகள் குறித்த சட்டம் விரைவில்

Lankathas Pathmanathan

நெடுந்தெரு 401 தீ விபத்தில் இருவர் மரணம்

Lankathas Pathmanathan

வதிவிட பாடசாலையில் இருந்து தப்பியவர்களுக்கு தனது அர்ப்பணிப்பை காட்டுவதற்கான வாய்ப்பை தவற விட்ட Trudeau!

Gaya Raja

Leave a Comment