September 14, 2026
தேசியம்
செய்திகள்

கட்சி தாவுவதை தடை செய்ய முயலும் NDP?

தொகுதி மக்களின் அனுமதியின்றி கட்சி தாவுவதை தடை செய்ய NDP முயல்கிறது.

வாக்காளர்களின் ஆதரவைப் பெறாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடை செய்யும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக NDP நாடாளுமன்ற உறுப்பினர் Don Davies தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கை ஒன்றை NDP திங்கட்கிழமை (01வெளியிட்டது.

அண்மைய  மாதங்களில் பிரதமர் Mark Carney அரசாங்கத்தை வலுப்படுத்தி, Liberal கட்சி பெரும்பான்மையைப் பெற உதவிய கட்சித் தாவல்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இது அமைகிறது.

Mark Carney அரசாங்கம் 5 மாதங்களில் 5 கட்சி மாறியவர்களை ஈர்த்த நிலையில் இந்த முயற்சியில் NDP ஈடுபட்டுள்ளது.

தனிநபர் சட்ட மூலங்கள் என அழைக்கப்படும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்ட மூலங்கள் அரிதாகவே நிறைவேறினாலும், அவை குறித்து கவனத்தை ஈர்க்கும் நிலை உள்ளது.

கட்சி தாவியவர்களைத் தங்கள் புதிய கட்சியின் சின்னத்தின் கீழ் மீண்டும் போட்டியிட கட்டாயப்படுத்தும் நோக்கில், நாடாளுமன்றச் சட்டத்தைத் திருத்துவதற்கான முதல் முயற்சி இதுவல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் Don Davies எடுத்த முந்தைய முயற்சிகள் சட்டமாக இயற்றப்பட தவறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம், NDP தலைவர் Avi Lewis, கட்சி தாவலுக்கு எதிரான கட்சியின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்தார்.

Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலத்தில் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து வந்துள்ளனர்.

Related posts

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Lankathas Pathmanathan

அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகப் போரில் கனடா வெற்றிபெறும்: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment