தேசியம்
செய்திகள்

மாணவர் வருகை மீண்டும் சரிவை எட்டியது

கனடாவின் மாணவர் வருகை மீண்டும் சரிவை எட்டியது.
கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை துறையின் (IRCC) புதிய தரவுகளின்படி, March 2026 சர்வதேச மாணவர்களின் வருகை மீண்டும் ஒரு சரிவை எட்டியது.
தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசு முனைந்து வரும் நிலையில் இந்த சரிவு பதிவாகியுள்ளது.
2026 March மாதத்தில் கனடா 2,085 புதிய சர்வதேச மாணவரர்களை மட்டுமே வரவேற்றது.
இது கனடிய வரலாற்றிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையாகும்.
அதே சமயம், தற்காலிகப் பணியாளர்கள் வருகை அதிகரித்துள்ளது.
February மாதத்தில் குறைந்த அளவிலிருந்த தற்காலிகப் பணியாளர்கள் வருகை March மாதம் மீண்டுள்ளது.
இருப்பினும் அது முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட அளவுகளை விட மிகவும் குறைவாகவே உள்ளது.
February மாதம் 10,840 ஆக இருந்த புதிய தற்காலிகப் பணியாளர்கள் எண்ணிக்கையை விட, March மாதத்தில் 13,910 ஆக அதிகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டு January முதல் March வரையிலான காலகட்டத்தில், 2024-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கனடாவில் புதிய மாணவர்கள், தொழிலாளர்களின் வருகை சுமார் 75 சதவீதம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

2024 Paris Olympics: எழாவது தங்கம் வென்றது கனடா!

Lankathas Pathmanathan

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja

Leave a Comment