September 12, 2026
தேசியம்
செய்திகள்

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா பின்னடைவு ?

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா ‘பின்னடைவு’ அடைவதாக பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், நீண்டகால சுற்றுச்சூழல் ஆர்வலருமான Steven Guilbeault, இந்த கோடை காலத்தின் பிற்பகுதியில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளார்.

இந்த நிலையில் பருவநிலை மாற்றம் குறித்த பிரதமரின் அணுகுமுறையை தான்  ஏற்கவில்லை என Steven Guilbeault கூறுகிறார்.

தவிரவும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் கனடா ‘பின்னடைவு’ அடைந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் Mark Carney, Alberta மாகாண முதல்வர் Danielle Smith ஆகியோர் ஒரு முக்கிய எரிசக்தி ஒப்பந்தத்திலும், pipeline திட்டத்தை முன்னெடுப்பதற்கான உறுதிமொழியிலும் கையெழுத்திட்ட பின்னர், தான் அரசியலில் இருந்து விலகுவது குறித்து சிந்திக்க ஆரம்பித்ததாக Steven Guilbeault கூறினார்.

அந்த நேரத்தில் அவர் அமைச்சரவையில் இருந்து விலகும் கடுமையான முடிவை எடுத்த போதிலும், Liberal கட்சி குழுவில் தொடர்ந்து நீடித்தார்.

2019-இல் Justin Trudeau தலைமையிலான Liberal கட்சியுடன் தனது முதல் தேர்தல் வெற்றி பெற்றதிலிருந்து, கடந்த ஆண்டு இறுதியில் பிரதமர் Mark Carney அமைச்சரவையிலிருந்து விலகும் வரை Steven Guilbeault அமைச்சராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது!

Lankathas Pathmanathan

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கனேடியர்கள் விரைவில் விவரங்களை எதிர்பார்க்கலாம்: பிரதமர்

Gaya Raja

Leave a Comment