தேசியம்
செய்திகள்

புதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதி குறித்து மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலை ஆரம்பிக்கும் Ontario

புதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதி குறித்த ஒப்பந்தத்தில் பணியாற்ற, மத்திய அரசாங்கத்துடன் நேரடியாக கலந்துரையாடலை ஆரம்பிக்கும் முதலாவது மாகாணமாக Ontario அமையவுள்ளது.

இருதரப்பு சுகாதார ஒப்பந்தம் குறித்து Ontario மாகாண அரசாங்கத்துடன் மத்திய சுகாதார அமைச்சர் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

மத்திய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos வியாழனன்று முதல்வர் Doug Ford, Ontario சுகாதார அமைச்சர் Sylvia Jones ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் Justin Trudeau அடுத்த 10 ஆண்டுகளில் 196 பில்லியன் டொலர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நிதியை மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் வழங்கும் திட்டத்தை சமர்ப்பித்த இரண்டு தினங்களில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

சில வாரங்களில் Ontarioவுடன் பேச்சு வார்த்தைகளை முடித்துக்கொள்ள Duclos திட்டமிட்டுள்ளார்

மாகாணங்களுக்கும், பிராந்தியங்களுக்கும் மத்திய அரசாங்கம் அறிவித்துள்ள $46.2 பில்லியன் புதிய நிதி உதவி ஒரு ஆரம்ப புள்ளி என Ontario முதல்வர் தெரிவித்தார்.

Related posts

Pickering நகரில் வாகனம் ஏரியில் நுழைந்ததில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Ontarioவில் குறைவடையும் எரிபொருளின் விலை

வடக்கு Nova Scotiaவில் அவசர நிலை பிரகடனம்

Lankathas Pathmanathan

Leave a Comment