Alberta சுதந்திர வாக்கெடுப்பு தேவையற்றது என மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார்.
முதல்வர் Danielle Smith பதவியில் நீடிப்பதற்காக மட்டுமே இந்த வாக்கெடுப்பை நடத்துவதாக Alberta NDP தலைவர் Naheed Nenshi தெரிவித்தார்.
Alberta கனடாவிலிருந்து வெளியேற வேண்டுமா என்பது குறித்த பொது வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கருத்தை அவர் வெள்ளிக்கிழமை (22) முன்வைத்தார்.
கனடாவில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து Alberta பொது வாக்கெடுப்பு ஒன்றை October 19-ஆம் திகதி நடத்த உள்ளது.
வியாழக்கிழமை (21) ஒரு தொலைக்காட்சி உரையில் மாகாண முதல்வர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்த பொது வாக்கெடுப்பு கேள்வி “கேலிக்கூத்தானது” என Naheed Nenshi விமர்சித்தார்.
ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது குறித்த பொது வாக்கெடுப்பு, Alberta மாகாணத்தின் பொருளாதாரச் சேதத்தை நீட்டித்து அரசியல் பிளவுகளை தூண்டிவிடும் ஒரு “முடிவற்ற வாக்கெடுப்பு” என அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கத்தின் கொள்கையால் விரக்தியடைந்த Alberta மக்களுக்கு முதல்வர் தனது தொலைக்காட்சி உரையில் அனுதாபம் தெரிவித்த வேளையில், பிரிவினைவாத வாக்குகளை விரும்பாத பெரும்பான்மையான Alberta மக்கள் குறித்து Danielle Smith மௌனம் காத்து வருவது குறித்து Alberta NDP தலைவர் விசனம் தெரிவித்தார்.
பிரிவினைவாதிகளுக்கு எதிரான எதிர்ப்பு ஒரு கட்சி சார்பற்ற முயற்சியாக இருக்க வேண்டும் எனவும் Naheed Nenshi ஆதரவாளர்களிடம் கூறினார்.
Alberta NDP ஒரு மத்திய பிரச்சார வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
