தேசியம்
செய்திகள்

கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு Alberta நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு?

கனடாவிலிருந்து பிரிந்து செல்வது குறித்த Alberta வாக்களிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பொதுவாக எதிரான கருத்து நிலவுகிறது.

இந்த பிரிவினைவாதம் குறித்த வாக்கெடுப்பு அறிவித்தலுக்கு அனைத்துத் தரப்பு அரசியல் தலைவர்களும் பதிலளித்து வருகின்றனர்.

கனடாவிலிருந்து பிரிந்து செல்வதற்கு எதிர்காலத்தில் வாக்களிப்பதா இல்லையா என்பது உள்ளிட்ட தொடர்ச்சியான பொது வாக்கெடுப்பு கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, Alberta வாக்காளர்கள் எதிர்வரும்  இலையுதிர்காலத்தில் வாக்குச்சாவடிக்கு செல்லவுள்ளார்.

கனடாவில் நீடிப்பதா, இல்லையா என்பது குறித்து Alberta பொது வாக்கெடுப்பு ஒன்றை October 19-ஆம் திகதி நடத்த உள்ளது.

இந்த நிலையில் பிரிவினைவாத வாக்கெடுப்பு குறித்து Albeta நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரிவினைவாத உரையாடலில் சிறிதும் பங்கெடுக்க விரும்பாத Alberta மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை மாகாண முதல்வர் Danielle Smith வேண்டுமென்றே புறக்கணிப்பதாக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Corey Hogan குற்றம் சாட்டினார்.

Calgary Confederation தொகுதியின் பிரதிநிதியான அவர் X தளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஒரு பொது வாக்கெடுப்பு குறித்து நடத்தப்படும் வாக்கெடுப்பு எதையும் தீர்த்து வைக்க உதவாது என அவர் குறிப்பிட்டார்.

இது குழப்பத்தை மேலும் அதிகரிக்கிறது என கூறிய Corey Hogan, இது கவனத்தை சிதறடிக்கும் – பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார்.

எந்த ஒரு பொது வாக்கெடுப்பிலும் நான் என் நாட்டிற்காகக் குரல் கொடுப்பேன் என Edmonton பகுதியின் Parkland தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Dane Lloyd தெரிவித்தார்.

ஒன்றுபட்ட கனடாவிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளதாக அவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Alberta மாகாணத்தை 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவ படுத்துகின்றனர்.

இதில் Conservative தலைவர் Pierre Poilievre (Battle River-Crowfoot தொகுதி) உட்பட 33 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஒரு NDP நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குகிறார்.

ஒரு ஒன்றுபட்ட கனடாவை தான் ஆதரிப்பதாக கூறிய  Pierre Poilievre,  இதற்காக தினமும் அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.

Related posts

குழந்தைகளை குறி வைத்த பாலியல் மிரட்டல் குற்றச்சாட்டில் கனடிய தமிழருக்கு அமெரிக்காவில் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan

Ontario அரசாங்கத்தை சாடும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை!

Lankathas Pathmanathan

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment