September 24, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள்?

Ebola அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் புதிய எல்லைப் பரிசோதனை நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கனடாவில் Ebola தொற்று மக்களை பாதிக்கும் அபாயம் குறைவாக உள்ளது என கனடாவின் தலைமை மருத்துவர் Dr. Joss Reimer தெரிவித்துள்ளார்

வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள நோய் பரவலுக்கு கனடா எவ்வாறான பதில் நடவடிக்கைகளை முன்னெடுத்து  வருகிறது என்பதை விலக்கு ஊடகவியலாளர் சந்திப்பில் கனடிய எல்லையில் மேற்கொள்ளப்படும் புதிய பரிசோதனை நடவடிக்கைகள் உட்பட்ட விபரங்களை அவர் வெளியிட்டார்.

இந்த நடவடிக்கைகள் புதன்கிழமை (20) முதல் அமுலுக்கு வந்தன.

கனடிய எல்லையில் மேலதிக பணியாளர்களை நியமிப்பது, மக்கள் எங்கிருந்து பயணம் செய்துள்ளனர், அவர்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்த பரிசோதனை கேள்விகளைக் கேட்பது ஆகியவை இதில் அடங்கும்.

பரிசோதனை செயல்பாட்டின் போது அடையாளம் காணப்படும் பயணிகளை மதிப்பிடுவதற்காக, தனிமைப்படுத்தல் அதிகாரிகள் எல்லையில் பணி அமர்த்தப்படுவார்கள்.

பயணத் தடை தொடர்பான முடிவுகள் அமைச்சரவையால் எடுக்கப்படுகின்றன என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

எத்தியோப்பியாவில் இருந்து நாடு திரும்பிய Ontario மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எபோலா தொற்று இல்லை என முடிவு உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Congo ஜனநாயகக் குடியரசை பேரழிவுக்கு உள்ளாக்கும் நோயுடன் ஒத்துப்போகும் அறிகுறிகள் நோயாளிக்கு இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதாக Dr. Joss Reimer கூறினார்.

Related posts

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

Lankathas Pathmanathan

ஈரான் போராட்டங்களுக்கு ஆதரவாக கனடாவில் பேரணிகள்

Lankathas Pathmanathan

COVID -19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

Leave a Comment