தேசியம்
செய்திகள்

Toronto நகர முதல்வராக தொடர John Tory தீர்மானம்?

Toronto நகர வரவு செலவு திட்ட விவாதம் வரை நகர முதல்வராக தொடர John Tory தீர்மானித்துள்ளார்.

திங்கட்கிழமை (13) பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் நகர முதல்வர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்தியது.

16.2 பில்லியன் டொலர் செயல்பாட்டு, 49.3 பில்லியன் டொலர் மூலதன வரவு செலவுத் திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்வதற்காக John Tory வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Toronto நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை )10) John Tory அறிவித்தார்.

COVID தொற்று காலத்தில் தனது அலுவலக ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை ஏற்றுக் கொண்ட பின்னர் நகர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக John Tory அறிவித்தார்.

தனது பதவி விலகல் கடிதத்தை வரவிருக்கும் நாட்களில் சமர்ப்பிக்க இருப்பதாக John Tory கூறினார்.

ஆனால் அதற்கான உறுதியான திகதி குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

திங்களன்று John Tory, துணை நகர முதல்வர் Jennifer McKelvie, நகர சபை உறுப்பினர்களை சந்தித்தார்.

ஒரு முறையான பதவி மாற்றத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது குறித்து இந்த சந்திப்புகளில் உரையாடப்பட்டது

John Tory பதவி விலகும் நிலையில், Toronto நகர சட்டத்தின் கீழ், துணை நகர முதல்வர் Jennifer McKelvie, இடைத் தேர்தல் நடைபெறும் வரை Toronto நகர முதல்வர் பதவியை ஏற்க முடியும்.

Related posts

Ottawaவில் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு உலக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan

40 மில்லியனை தாண்டியது கனடிய மக்கள் தொகை

Lankathas Pathmanathan

Leave a Comment