தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்கள்!

Ontarioவில் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்தும் நான்காவது நாளாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின.

ஞாயிற்றுக்கிழமை 2,448 புதிய தொற்றுக்களையும், 19 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.  இதன் மூலம் மாகாணத்தின் ஏழு நாள் சராசரி தினசரி தொற்றுகள் பல வாரங்களில் முதல் முறையாக இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது. புதிய தொற்றுகளின் ஏழு நாள் சராசரி இப்போது 2,038 ஆக உள்ளது.

Ontarioவில் சனிக்கிழமை 2,453, வெள்ளிக்கிழமை 2,169, வியாழக்கிழமை 2,380, புதன்கிழமை 1,571 என தொற்றுக்களின் எண்ணிக்கை பதிவானது. ஞாயிற்றுக்கிழமை பதிவான 19 மரணங்கள், March மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் பதிவான அதிக அளவிலான மரணங்களாகும்.

Related posts

North Bay அருகே வீதி விபத்து ; தமிழ் யுவதி மரணம்

Gaya Raja

Barrhaven நகரில் சடலமாக மீட்கப்பட்ட ஆறு பேரும் இலங்கையர்கள்!

Lankathas Pathmanathan

Ontario பொருளாதார மறுதிறப்பு திட்டத்தின் மூன்றாம் படிக்கு நகர்கிறது!

Gaya Raja

Leave a Comment