தேசியம்
செய்திகள்

திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பாக இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் மீது குற்றச்சாட்டு

திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் மீது Ontario மாகாண காவல்துறை (OPP) குற்றம் சாட்டியுள்ளது.

திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்வது தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ServiceOntario  ஊழியர் ஒருவரும் அடங்குகிறார்.

Project Tailwind எனப் பெயரிடப்பட்ட இந்த விசாரணை, திருடப்பட்ட வாகனங்களின் வாகன பதிவு எண்களை மாற்றுதல் (re-vinning), மோசடியாக பதிவு செய்தல் (fraudulent registration) ஆகிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆரம்பிக்கப்பட்டதாக OPP வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Ontario மாகாணத்தின் வாகனப் பதிவு செயல்முறைக்கு தேவைப்படும் ஆவணங்கள் “முறையற்ற விதத்தில் பெறப்பட்டு, தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை” கண்டறிந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த மாத ஆரம்பத்தில் Maple, Brampton, Kitchener ஆகிய நகரங்களில் காவல்துறை நான்கு தேடுதல் உத்தரவுகளை (search warrants) செயல்படுத்தியது.

அந்த சோதனைகளைத் தொடர்ந்து, திருடப்பட்ட ஆறு வாகனங்களும், மின்னணு சாதனங்களும் மீட்கப்பட்டன.

இந்த விசாரணையில் 32 வயதான Brampton நகரை சேர்ந்த சர்வதன் பாலசுப்ரமணியம், 34 வயதான Brampton நகரை சேர்ந்த கஜன் கருணாநிதி, 28 வயதான Vaughan நகரை சேர்ந்த Sonia Cianfaran, 36 வயதான Kitchene நகரை சேர்ந்த Jose Lozano ஆகியோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நால்வரும் June 12-ஆம் திகதி Newmarket நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்த தயாராகும் அரசு?

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Gaya Raja

வரலாறு காணாத உச்சத்தை எட்டும் எரிவாயு விலை

Lankathas Pathmanathan

Leave a Comment