Toronto பெரும்பாகத்தில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கிறது.
புதன்கிழமை (06) எரிபொருளின் விலை ஒரு litre ஏழு சதம் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
பெருநகர Toronto பகுதியில் சராசரியாக ஒரு litre சுமார் $1.88 ஆக உள்ள எரிபொருளின் விலை புதன்கிழமை ஒரு litre $1.95 ஆக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
ஈரானில் யுத்தம் தொடர்வதால், எரிபொருள் விலைகள் படிப்படியாக உயர்ந்து, ஒரு கட்டத்தில் “வாகனம் ஓட்டுவது மிகவும் செலவு மிக்கது” என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும் நிலைக்கு செல்லும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2022-ல் Toronto-வில் எரிபொருளின் விலை விலை ஒரு litre $2.15 என்ற உச்சத்தை எட்டியது நினைவு கூறத்தக்கது.
ஆனாலும், சில நாட்களுக்குள் அந்த அதிகரிப்பு குறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தற்போது அதிகரிக்கும் விலைகள் மேலும் சில காலத்திற்கு அதே நிலையில் நீடிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
