September 9, 2026
தேசியம்
செய்திகள்

பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்

மத்திய பற்றாக்குறையை கட்டுப்படுத்த பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

வசந்தகால பொருளாதார அறிக்கை வெளியடப்படுவதற்கு முன்னதாக  பற்றாக்குறையை கட்டுப்படுத்துமாறு Pierre Poilievre வலியுறுத்தினார்.

பற்றாக்குறையை 31 பில்லியன் டொலராக கட்டுப்படுத்துமாறு Mark Carney இடம் அவர்  வலியுறுத்தினார்.

பெரும் செலவினங்களை நீக்குவதன் மூலமும் இதை சாத்தியப்படுத்த முடியும் என Pierre Poilievre கூறினார்.

“எமக்கு எந்தப் பற்றாக்குறையும் இருக்கக்கூடாது,” என பிரதமருக்கு எழுதிய கடிதத்தல் Pierre Poilievre குறிப்பிட்டார்.

Pierre Poilievre முன்மொழியும் $31 பில்லியன் உச்சவரம்பானது, Justin Trudeau அரசாங்கம் 2024 இலையுதிர் காலப் பொருளாதார அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, ​​2026-27 நிதியாண்டிற்கான பற்றாக்குறையாக கணித்திருந்த தொகையாகும்.

கடந்த ஆண்டு Mark Carney அரசாங்கம் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, ​​2026-27 நிதியாண்டிற்கான பற்றாக்குறை சுமார் $65 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டது.

Related posts

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு Air கனடா ஊழியர்கள் கைது

Lankathas Pathmanathan

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஈர்த்து வரும் பிரதமரின் சர்வதேச பயணங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment