தேசியம்
செய்திகள்

நகரசபை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் ஆரம்பம்

Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை தேர்தல்களுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது.

பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October 26-ஆம் திகதி Ontario மாகாணத்தில் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் மாகாண வாக்காளர்கள் அனைத்து நகராட்சிகளிலும் நகர முதல்வர்கள், நகரசபை உறுப்பினர்கள், கல்விச் சபை உறுப்பினர்கள் உட்பட ஏனைய  அதிகாரிகளை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தப் பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ வேட்புமனு தாக்கல் காலம் May 1 அன்று ஆரம்பமாகி August 21 அன்று முடிவடைகிறது.

இந்தத் தேர்தலில் பல தமிழர்கள் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஒரே ஆண்டில் மாகாண சபைத் தேர்தலும்  நகரசபைத் தேர்தலும் நடைபெறாமல் இருக்கும் முதல் வருடம் இதுவாகும்.

Related posts

Ontario Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடப் போவதில்லை: Mike Schreiner

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி பதவி விலக வேண்டும்: வலுப்பெற்று எதிர்க்கட்சியின் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment