Manitoba பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை பீடாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரது பதவிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Jonathan Black-Branch-சிற்கான பிடியாணை March 30 அன்று பிறப்பிக்கப்பட்டதாக Winnipeg காவல்துறை உறுதிப்படுத்தியது.
Jonathan Black-Branch 2016 முதல் 2020 வரை சட்டத்துறை பீடாதிபதியாக பணியாற்றினார்.
ஒரு புகாரின் பேரில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில், அந்தக் காலகட்டத்தில் $600,000 அதிகமான பல்கலைக்கழக நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில் அவரது பணி 2020 July-யில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதே கால கட்டத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
2024-இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரியை இங்கிலாந்தின் Oxford எனக் குறிப்பிடுகின்றன.
அவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வரக்கூடும் எனவும் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
Jonathan Black-Branch-சிக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
