தேசியம்
செய்திகள்

Manitoba பல்கலைக்கழக முன்னாள் சட்டத்துறை பீடாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய பிடியாணை

Manitoba பல்கலைக்கழகத்தின் முன்னாள் சட்டத்துறை பீடாதிபதிக்கு  எதிராக நாடு தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவரது பதவிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Jonathan Black-Branch-சிற்கான பிடியாணை March 30 அன்று பிறப்பிக்கப்பட்டதாக Winnipeg காவல்துறை உறுதிப்படுத்தியது.

Jonathan Black-Branch 2016 முதல் 2020 வரை சட்டத்துறை பீடாதிபதியாக பணியாற்றினார்.

ஒரு புகாரின் பேரில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில், அந்தக் காலகட்டத்தில் $600,000 அதிகமான பல்கலைக்கழக நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் அவரது பணி 2020 July-யில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

அதே கால கட்டத்தில், அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.

2024-இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள், அவரது கடைசியாக அறியப்பட்ட முகவரியை இங்கிலாந்தின் Oxford எனக் குறிப்பிடுகின்றன.

அவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வரக்கூடும் எனவும் ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Jonathan Black-Branch-சிக்கு எதிரான குற்றசாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கடுமையான குளிர்கால வானிலை கனடாவின் சில பகுதிகளில் தொடர்கிறது

Lankathas Pathmanathan

கனடாவில் அதிகரிக்கும் குழு வன்முறை தொடர்பான மரணங்கள்

Lankathas Pathmanathan

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

Gaya Raja

Leave a Comment