தேசியம்
செய்திகள்

NATO பாதுகாப்புச் செலவின இலக்கை எட்டியது கனடா

கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்ற NATO பாதுகாப்புச் செலவின இலக்கை அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலான மெதுவான முன்னேற்றத்திற்குப் பின்னர், 2014-ல் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் என்ற NATO செலவின இலக்கை கனடா அதிகாரப்பூர்வமாக எட்டியுள்ளது.

கனடா 2025-ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக $60 பில்லியனுக்கும் அதிகமாகச் செலவிட்டதாக NATO ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது.

இது கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.01 சதவிகிதத்திற்கு சமமான தொகையாகும்.

2025 நிதியாண்டின் இறுதிக்குள் 2 சதவீத இலக்கை எட்டுவதை கனடிய பிரதமர் Mark Carney கடந்த கோடையில் ஒரு குறிக்கோளாக நிர்ணயித்திருந்தார்.

2024-ல், கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.47 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவழித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் கண்டுபிடிப்பு?

Lankathas Pathmanathan

Montreal நகரில் தாய், மகள் கொலை

Lankathas Pathmanathan

இரண்டு Alberta அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை

Lankathas Pathmanathan

Leave a Comment