தேசியம்
செய்திகள்

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை இடை நிறுத்திய CBSA

நான்கு வளைகுடா நாடுகளுக்கான நாடு கடத்தலை CBSA இடை நிறுத்தியுள்ளது.
தொடரும் மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக இந்த முடிவை கனடிய எல்லை சேவைகள் முகமையகம் (The Canada Border Services Agency – CBSA) எடுத்துள்ளது.
ஈரானில் நடைபெறும் போர் காரணமாக, கனடாவிற்குள் நுழைய அனுமதி அற்றவர்களை நான்கு வளைகுடா நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளதாக CBSA அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates – UAE), குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கான நாடு கடத்தல்கள் தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன CBSA செவ்வாய்க்கிழமை (24) வெளியியான ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
“இந்த நாடுகளில் நிலவும் நிலையற்ற, கணிக்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என அந்த அறிக்கை  தெரிவித்தது.
மத்திய கிழக்கின் பெரும்பகுதிக்கும் பரவியுள்ள மோதலின் காரணமாக, இந்த மாத ஆரம்பத்தில் இஸ்ரேல், லெபனானுக்கான நாடு கடத்தல்களை நிறுத்தி வைக்க CBSA இதேபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontario ;ஒரு மாதத்திற்கு மேலான காலத்தில் மிகக் குறைவான தொற்றுக்களை பதிவு செய்தது!

Gaya Raja

நாடளாவிய ரீதியில் கடுமையான குளிர் நிலை

Lankathas Pathmanathan

ரஷ்யா G20 நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்: கனடிய துணைப் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment