தேசியம்
செய்திகள்

2026 Paralympic: முதலாவது தங்கம் வென்றது கனடா!

Paralympic போட்டிகளில் இரண்டாவது நாளில் கனடா மேலும் மூன்று பதக்கங்களை வென்றது.

2026 Milan Cortina Paralympic போட்டிகள் சனிக்கிழமை (07) ஆரம்பித்தன.

இதில் கனடா முதலாவது முழு நாள் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றிருந்தது.

இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (08) கனடா ஒரு தங்கம் உட்பட மேலும் மூன்று பதக்கங்களை வென்றது.

2026 Paralympic போட்டிகளில் கனடாவின் முதலாவது தங்கத்தை Natalie Wilkie வென்றார்.

இது இரண்டு நாட்களில் அவர் வெல்லும் இரண்டாவது புதக்கமாகும்.

Mark Arendz வெள்ளிப்பதக்கம் ஒன்றையும், Tyler Turner வெண்கலப் பதக்கம் ஒன்றையும் ஞாயிற்றுக்கிழமை வென்றனர்.

இந்த நிலையில்  இரண்டாவது நாள் இறுதியில் கனடா ஒரு தங்கம், மூன்று வெள்ளி,  இரண்டு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளது.

Related posts

Hamilton நகர முதல்வர் பதவிக்கு போட்டியிடும் Andrea Horwath

நான்கு மாகாணங்களின் ஏழு தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல்கள்?

Lankathas Pathmanathan

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் Mark Carney!

Lankathas Pathmanathan

Leave a Comment