தேசியம்
செய்திகள்

கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பாடு!

கனடிய, இந்திய பிரதமர்கள் பல ஒப்பந்தங்களில் உடன்பட்டுள்ளனர்.

கனடிய பிரதமர் Mark Carney இந்தியாவுக்கான பயணம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல தலைவர்களை சந்தித்தார்.

இந்தியாவிற்கு யுரேனியம் வழங்குவதற்கான நீண்ட கால ஒப்பந்தம் உள்ளாக கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பல ஒப்பந்தங்களில் இரு நாட்டின் பிரதம மந்திரிகள் உடன்பட்டுள்ளனர்.

டெல்லியில் திங்கட்கிழமை (02) நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை முடிக்க தானும் நரேந்திர மோடியும் ஒப்புக்கொண்டதாக Mark Carney கூறினார்.

2023 முதல் விரிசல் அடைந்த இரு நாட்டு உறவுகளை மீட்டெடுக்க இரு தலைவர்களும் முயற்சித்து வருகின்றனர்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில் பிரதமர் Mark Carney, பிரதமர் நரேந்திர மோடியை கனடாவுக்கு வருகை தருமாறு அழைத்தார்.

இந்த அழைப்பை நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டுள்ள போதிலும் அதற்கான திகதி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

இந்தியாவில் தனது பயணத்தை முடித்துள்ள Mark Carney தனது இந்தோ-பசிபிக் சுற்றுப்பயணத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்வார்,

Related posts

பேச்சுவார்த்தை தொடர்கிறது: கனடா-அமெரிக்கா வர்த்தக அமைச்சர்

Lankathas Pathmanathan

எரிபொருள் விலையில் பெரும் மாற்றம்: Mark Carney அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Lankathas Pathmanathan

மகாராணிக்கு மரணத்திற்குப் பின்னர் முடியாட்சி உறவுகள் குறித்து வாக்கெடுப்பு அவசியம்: புதிய கனடிய கருத்துக் கணிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment