September 3, 2026
தேசியம்
செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் காரணமாக கனடாவிற்கு அச்சுறுத்தல்?

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலின் விளைவுகள் காரணமாக கனடாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என கனடிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், உள்நாட்டில் உடனடி அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என கனடிய காவல்துறை தலைவர்கள் சங்கம் கூறுகிறது.

ஆனால் ஈரானில் வான்வழித் தாக்குதல்கள் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில் பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு காவல்துறைத் தலைவர்கள் எச்சரிக்கின்றனர்

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு பெரிய தாக்குதலைத் சனிக்கிழமை (28) ஆரம்பித்தது.

இந்தத் தாக்குதலில் ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஈரானில் நடந்து வரும் மோதலின் விளைவுகளை கனடா தொடர்ந்து எதிர்கொள்கிறது.

ஈரானில் அமெரிக்காவின் நடவடிக்கையை கனடா ஆதரிப்பதாக கூறிய கனடிய பிரதமர் Mark Carney, இதில் கனடா நேரடியாக ஈடுபடாது என கூறினார்.

புவிசார் அரசியல் பதற்றம் நிலவும் காலகட்டங்களில், தீவிரவாத வலையமைப்புகள், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நபர்கள் அல்லது மறைமுக அச்சுறுத்தல் செய்பவர்கள், வெறுப்பைத் தூண்டும் வன்முறையை தூண்டுவதற்கு இந்தச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கக்கூடும் என காவல்துறை தலைவர்கள் சங்கம் கூறுகிறது.

Related posts

கனடாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

2026 குளிர்கால Olympic: தங்கம் வெல்லும் சந்தர்ப்பத்தை தவற விட்டது கனடா

Lankathas Pathmanathan

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாவதற்கு சில தினங்கள் எடுக்கலாம்: தேர்தல் திணைக்களம்!

Gaya Raja

Leave a Comment