தேசியம்
செய்திகள்

60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனடியர்கள் Mexico-வில்?

Mexico-வில் உள்ளதாக பதிவு செய்த கனடியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்கு Mexico-வின் Puerto Vallarta அருகே முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் போது பிரதான போதைப் பொருள் கும்பலின் தலைவர் Nemesio Ruben Oseguera Cervantes இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (22)  கொல்லப்பட்டார்.

இதனையடுத்து உடனடியாக Mexico-வின் பல மாநிலங்களில் வன்முறையும் அமைதியின்மையும் பரவியது.

செவ்வாய்க்கிழமை (24) மாலை நிலவரப்படி, Mexicoவில் 61,000-க்கும் மேற்பட்ட கனடியர்கள் பதிவு செய்திருந்தனர்.

இது ஞாயிற்றுக்கிழமை (22) சுமார் 18,000 ஆக இருந்து திங்கட்கிழமை (23) காலை 26,305 ஆகவும், செவ்வாய்க்கிழமை காலை 55,000 ஆகவும் அதிகரித்தது.

இந்தப் பதிவு தன்னார்வமானது என்பதால், Mexico-வில் உள்ள கனடியர்களின் பொதுவான மதிப்பீட்டை மட்டுமே இந்த எண்ணிக்கை குறிக்கிறது என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளிர்கால மாதங்களில், 100,000 முதல் 200,000 வரை கனடியர்கள் Mexico-வில் இருப்பார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.

வன்முறை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த அநேக விமான சேவைகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள.

இந்த நிலையில் உள்ளூர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை பின்பற்ற கனடியர்கள் அரசாங்கத்தினால் வலியுறுத்தப்படுகின்றனர்.

கனடியர்கள் Mexico-விற்கு பயணம் செய்யும் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமா எனற கேள்விக்கு பதிலளிக்க கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Related posts

கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டி இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan

Toronto வீடு விற்பனையில் சரிவு

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான முதலாவது bivalent booster கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Leave a Comment