Tumbler Ridge நகர பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.
நாடளாவிய ரீதியிலான பிடியாணையில் இவர் வெள்ளிக்கிழமை (20) கைதானார்.
கொலை முயற்சி குற்றத்திற்காக கனடா முழுவதும் தேடப்படும் நபராக இருந்ததாக Jacob Van Rootselaar கைது செய்யப்பட்டதை RCMP உறுதிப்படுத்தியது.
2024-ஆம் ஆண்டு சம்பவம் தொடர்பாக 22 வயதான Jacob Van Rootselaar தேடப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இவர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின்னர், அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவர் Tumbler Ridge நகர பாடசாலை துப்பாக்கிதாரி Jesse Van Roostelaar-ரின் மூத்த சகோதரர் என் தெரியவருகிறது.
February 10-ஆம் திகதி தனது தாய், 11 வயது வளர்ப்பு சகோதரர் உட்பட எட்டு பேரை Jesse Van Roostelaar கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
