தேசியம்
செய்திகள்

நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்ற பிரதான கட்சிகளுக்கு இடையில் இணக்கம்?

நாடாளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்ற ஆளும் Liberal அரசாங்கம் பிரதான எதிர்க்கட்சியுடன் நம்பிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக Andrew Scheer தெரிவித்தார்.

ஆனாலும், தேர்தலைத் தவிர்ப்பதற்கான முயற்சிகளால் இந்த ஒத்துழைப்பு உணர்வு தூண்டப்படுகிறதா என்பதை Conservative நாடாளுமன்ற குழுத் தலைவர் Andrew Scheer கூற மறுத்துவிட்டார்.

இரு தரப்பினருக்கும் இடையிலான கடந்த சில வார சந்திப்புக்களில், சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கருத்துவதாவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலைத் தவிர்ப்பதற்காக Liberal அரசாங்கம் பிரதான Conservative கட்சியுடன் ஏதேனும் ஒரு முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்க நாடாளுமன்ற குழுத் தலைவர் Steven MacKinnon மறுத்தார்.

இதற்கிடையில் பிரதமர் Mark Carney, Conservative தலைவர் Pierre Poilievre கடந்த வாரம் நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின் பின்னர் இரு கட்சிகளுக்கு இடையே அதிகரித்த ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

Liberal அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் 169 ஆசனங்களை தன்வசம் கொண்டுள்ளது,

பெரும்பான்மைக்கு மூன்று இடங்கள் குறைவாக உள்ள நிலையில், சட்டமூலங்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவு Liberal அரசாங்கத்திற்கு தேவையானதாகும் .

Related posts

Quebecகில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டன!

Gaya Raja

Justin Trudeau தலைமையில் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment