September 14, 2026
தேசியம்
செய்திகள்

சுதந்திர ஈரானுக்கு ஆதரவாக Toronto-வில் பேரணி!

ஈரானிய போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக Toronto நகர மையத்தில் 100,000-க்கும் மேற்பட்டோர் பேரணியில் ஈடுபட்டனர்.

ஈரானில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஞாயிற்றுக்கிழமை (01) அதிக எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் Toronto நகர மையத்தின் ஒரு பகுதியை முற்றுகையிட்டனர்.

Toronto-வில் Sankofa சதுர்க்கத்தில ஆரம்பித்த போராட்டம் Queen Park வரை தொடர்ந்தது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுதந்திர ஈரானுக்காக குரல் எழுப்பினர்.

December இறுதியில் ஈரானில் ஆரம்பித்த நாடு தழுவிய போராட்டங்கள் 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட மதகுருமார் ஆட்சியாளர்களுக்கு எதிரான பரந்த அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களாக மாறியது.

இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக Toronto நகர மையத்தில் வார விடுமுறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related posts

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஐந்து கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan

G20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களை Mark Carney சந்திப்பு!

Lankathas Pathmanathan

கடந்த காலாண்டில் கனேடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment