தேசியம்
செய்திகள்

400-க்கும் மேற்பட்ட RCMP உறுப்பினர்கள் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டனர்?

2024-ஆம் ஆண்டில் 400-க்கும் மேற்பட்ட RCMP உறுப்பினர்கள் தவறான நடத்தைக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.

இது குறைந்தது 20 பணிநீக்கங்கள் அல்லது பதவி விலகல்களுக்கு வழிவகுத்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

2024-ஆம் ஆண்டில் 408 ஊழியர்கள் தொடர்பான  443 முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக RCMP தெரிவித்தது.

இந்த வழக்குகளில் கால் பகுதி “கடுமையான” ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது.

பத்து RCMP ஊழியர்கள் குறைந்த பதவி நிலைக்கு தரம் இறக்கப்பட்டனர்.

இது முந்தைய இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட பதவிநிலை  தரமிறக்கங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமானதாகும்.

ஐந்து சதவீத தவறான நடத்தை வழக்குகள் பணி நீக்கம் அல்லது பதவி விலகளுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

புதன்கிழமை மிகப்பெரிய அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் NATO ஆயுதங்களை பயன்படுத்தலாம்: Justin Trudeau

Lankathas Pathmanathan

Ontario முதல் குடியினர் பாடசாலை ஆய்வுத் திட்ட நிதி உதவி குறைகிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment