தேசியம்
செய்திகள்

கனடா Minnesota அல்ல: அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி

கனடாவில் இருந்து மக்களை வெளியேற்றும் போது கனடாவின் செயல்முறை சாசன மதிப்புகளுக்கு ஏற்பதாக உள்ளதை உறுதி செய்வது தனது கடமை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

அமெரிக்காவின் Minnesota -வில் இரண்டு குடியிருப்பாளர்களின் மரணத்திற்கு காரணமான அமெரிக்க மத்திய படைகளின் அடக்குமுறை குறித்து தான் கருத்துத் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் கூறினார்.

கனடா Minnesota அல்ல என்பதை மாத்திரம் தன்னால் கூற முடியும் என என ஒரு நேர்காணலில் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ஏனைய நாடுகளின் செயல்முறைகள் குறித்து கருத்து தெரிவிப்பது எனது பொறுப்பு அல்ல எனவும் அவர் கூறினார்.

கனடா எல்லை சேவைகள் முகமைக்கு பொறுப்பான அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, கனடா கடந்த ஆண்டு 22,000-க்கும் மேற்பட்டவர்களை நாட்டை விட்டு அகற்றியதாக உறுதிப்படுத்தினார்.

இந்த நகர்வின் நடைமுறை மனிதாபிமான முறையை பின்பற்றியது என அவர் உறுதிப்படுத்தினார்

அமெரிக்க குடிவரவு சுங்க அமுலாக்க பிரிவு, சுங்க, எல்லை பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து Minnesota-வில் முன்னெடுத்த தீவிர நடவடிக்கைகள் பெரும் எதிர்ப்புகளை தூண்டியது.

அமெரிக்க தந்திரோபாயங்கள் பரவலாக விமர்சிக்கப்படுவதால், கனடிய பாதுகாப்பு நிறுவனங்கள் அண்மைய காலத்தில் அமெரிக்காவுடன் குறைவான உளவுத்துறை தகவல்களைப் பகிர்ந்து கொள்வதான கருத்தை அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி நிராகரித்தார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Conservative கட்சித் தலைவர் தோல்வி

Lankathas Pathmanathan

கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடித்துக் கொண்ட Donald Trump!

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை எதிர்த்துப் போராட உதவும் கனேடிய ஆயுதப் படையினர்

Lankathas Pathmanathan

Leave a Comment