தேசியம்
செய்திகள்

வட்டி விகிதங்கள் குறித்த மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள்?

வட்டி விகிதங்கள் குறித்த முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்புகளுடன் கனடாவின் மிகப்பெரிய வங்கிகள் 2026-ஆம் ஆண்டை நோக்கி நகர்கின்றன.

பணவீக்க அதிகரிப்பு, வர்த்தக நிச்சயமற்ற தன்மை, பலவீனமான உற்பத்தித்திறன், மக்கள் தொகை வளர்ச்சி குறைதல் ஆகியவை பெரும் பங்கு வகிக்கும் ஒரு ஆண்டை கனடிய மத்திய வங்கி எதிர்கொள்கிறது.

December 10-ஆம் திகதி வட்டி விகிதத்தை 2.25 சதவீதமாக நிலையாக வைத்திருக்க மத்திய வங்கி முடிவு செய்தது.

2025-ஆம் ஆண்டில் நான்கு முறை வட்டி விகிதத்தைக் குறைக்கும் நகர்வின் பின்னர் இந்த முடிவை மத்திய வங்கி எடுத்தது.

இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டில் 1.75 சதவீதம் வரை வட்டி விகித குறைப்பை BMO எதிர்பார்க்கிறது.

புதிய ஆண்டின் இரண்டாம் பாதியில், மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக உயர்த்தும் என Scotiabank வங்கி எதிர்பார்க்கிறது.

கனடாவின் தேசிய வங்கியும் அடுத்த ஆண்டின் பின் பகுதியில் இதே அளவிலான வட்டி விகித அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.

மத்திய வங்கி வட்டி விகிதங்களில் எந்த வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்தாது என CIBC கருதுகிறது.

2026-ஆம் ஆண்டு முழுவதும் மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்கும் என்று TD வங்கி எதிர்பார்க்கிறது.

வட்டி விகித குறைப்புக்களை விட அதிகரிப்பினால் அதிக ஆபத்து உள்ளதாக RBC பொருளாதார நிபுணர் எதிர்வு கூறினார்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

கனடியர்கள் கடவுச்சீட்டுக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை

Lankathas Pathmanathan

தொற்றின் பரவல் அதிகமாக உள்ள நாடுகளின் விமானங்களை கனடா நிறுத்த வேண்டும் – தொடரும் கோரிக்கைகள்!

Gaya Raja

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja

Leave a Comment