தேசியம்
செய்திகள்

அமெரிக்காவுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்!

அமெரிக்காவுக்கான புதிய கனடிய தூதராக Mark Wiseman அறிவிக்கப்பட்டார்.

கனடிய பிரதமர் Mark Carney இந்த நியமனத்தை அறிவித்தார்.

February 15, 2026 முதல் Mark Wiseman புதிய அமெரிக்க தூதராக பொறுப்பேற்பார் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடா-அமெரிக்க உறவுகள் குறித்த கனடிய பிரதமரின் ஆலோசகர்கள் குழுவில் Mark Wiseman ஏற்கனவே Mark Carney-யினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

Ontario மாகாணத்தின் Niagara Falls நகரில் பிறந்த Mark Wiseman, கனடாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிறுவனங்கள் சிலவற்றில் மூத்த பதவிகளை வகித்துள்ளார்.

அமெரிக்காவிற்கான கனடிய தூதர் பதவியில் இருந்து விலகுவதாக  Kirsten Hillman அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதிய தூதர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிக நிர்வாகியான Mark Wiseman பிரதமரின் நீண்டகால நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ள நிலையிலும், கனடா-அமெரிக்கா-Mexico ஒப்பந்தத்தின் (CUSMA) மறு ஆய்வு 2026-ஆம் ஆண்டு ஆரம்பிக்கவுள்ள நிலையிலும் இந்த பதவி நியமன அறிவித்தல் வெளியானது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Pearson விமான நிலையத்தில் திருடப்பட்ட தங்கம் இந்தியா அல்லது துபாயில்?

Lankathas Pathmanathan

முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும்: Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியது Air Canada

Lankathas Pathmanathan

Leave a Comment