தேசியம்
செய்திகள்

பாலியல் வன்கொடுமை விசாரணையில் தமிழ் பல் மருத்துவர் இளங்கோ முத்துக்குமாரு கைது

பாலியல் வன்கொடுமை விசாரணையில் தமிழ் பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Toronto-வைச் சேர்ந்த 66 வயதான இளங்கோ முத்துக்குமாரு என்பவர் மீது காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டது.

இவர் Scarborough நகரில் Finch Avenue East – Kennedy Road சந்திப்புக்கு அருகாமையில் Dr. Illango and Associates என்ற பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.

October 18-ஆம் திகதி சனிக்கிழமை 21 வயதான பெண் ஒருவர் அவரது பல் மருத்துவ அலுவலகத்திற்கு  சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.

அங்கு குற்றம் சாட்டப்பட்ட இளங்கோ முத்துக்குமாரு பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என் குற்றம் சாட்டப்படுகிறது.

அவருக்கு எதிராக Toronto காவல்துறையினர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

December 5-ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டப்பட்ட இளங்கோ முத்துக்குமாரு காவல்துறையில் சரணடைந்தார்.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட அவர் January 22, 2026 வியாழக்கிழமை Ontario நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.

இவரினால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கலாம் என புலனாய்வாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Dr. Illango and Associates பல் மருத்துவமனை Markham, Brampton நகரங்களிலும் கிளைகளை கொண்டுள்ளதாக அவர்களின் இணையம் குறிப்பிடுகிறது.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Stanley Cup: மூன்று கனடிய அணிகளில் ஒன்று மாத்திரம் முதலாவது ஆட்டத்தில் வெற்றி

Toronto Raptors அணி playoffs தொடருக்கு தெரிவு

Lankathas Pathmanathan

முடக்கப்பட்ட Freedom Convoy அமைப்பாளர்களின் நிதியை பெறுவதற்கான முயற்சி தோல்வி

Lankathas Pathmanathan

Leave a Comment