தேசியம்
செய்திகள்

Richmond Hill விபத்தில் தமிழர் மரணம்

Richmond Hill நகரில் நிகழ்ந்த விபத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.

இரண்டு வாகனங்கள் மோதியதில் பாதசாரி உயிரிழந்தார்.

இதில் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார்.

இந்த விபத்து Major Mackenzie Drive and Leslie Street சந்திப்பில் நிகழ்ந்தது.

வியாழக்கிழமை (18) இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி நடைபாதையில் மூன்று பேர் மீது மோதியதாக York பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

Vaughan நகரைச் சேர்ந்த 65 வயதுடைய பாதசாரி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதில் பலியானவர் ராஜதுரை துரைராஜா என குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் இலங்கையில் கோண்டாவிலை சேர்ந்தவர் என தெரியவருகிறது.

உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் இரண்டாவது பாதசாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூன்றாவது நபர் உயிருக்கு ஆபத்தற்ற  காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்துக்கு உள்ளன இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே இருந்து விசாரணைக்கு ஒத்துழைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்த குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Ontario அரசிற்கும், கனடிய மத்திய அரசிற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

கனடிய இறக்குமதிகளுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும்: Donald Trump

Lankathas Pathmanathan

கனடிய பிரதமர் – Alberta முதல்வர் சந்திப்பு: குழாய்த் திட்டம் தொடர்பாக அடுத்த மாதத்திற்குள் ஒரு உடன்பாடு?

Lankathas Pathmanathan

Leave a Comment