September 24, 2026
தேசியம்
செய்திகள்

Niagara காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டில் காயம்

Ontario மாகாணத்தின் Welland நகரில் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

வெள்ளிக்கிழமை (19)காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Welland பகுதியில் விசாரணைக்கு சென்ற Niagara காவல்துறை அதிகாரி துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இதில் ஆண் சந்தேக நபர் ஒருவர் தொடர்பு பட்டுளளர்   என தெரியவருகிறது.

காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும், இது குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு (SIU) அறிவிக்கப்பட்டதாகவும் Niagara காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த அதிகாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் காவல்துறை தெரிவித்தது.

இவரது காயங்கள்  உயிருக்கு ஆபத்தானவை அல்ல என கூறப்படுகிறது.

Welland மருத்துவமனையும் இரண்டு பாடசாலைகளும் (Plymouth பொதுப் பாடசாலை, St. Mary கத்தோலிக்க பாடசாலை) lockdown நிலையில் உள்ளன.

அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைய காவல்துறையினர் கோரினர்.

LJI Reporter ரம்யா சேது

Related posts

Markham Stouffville தொகுதியின் Conservative வேட்பாளர் தமிழர்!

Lankathas Pathmanathan

நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்த கனடா !

Gaya Raja

கனடிய மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment