தேசியம்
செய்திகள்

எதிர்க்கட்சியின் மற்றொரு சட்டமூலம் தோல்வி!

எதிர்க்கட்சியின் குழாய் திட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

புதிய Alberta குழாய் திட்டத்திற்கு நாடாளுமன்றம் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre முன்வைத்த தீர்மானம் தோல்வியடைந்தது.

இந்தத் தீர்மானம் செவ்வாய்கிழமை (09) வாக்கெடுப்புக்கு வந்தது.

139-க்கு 196 என்ற வாக்குகளால் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியின் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

புதிய எரிசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கனடிய மத்திய அரசாங்கமும், Alberta மாகாண அரசும் கடந்த மாதம் கையெழுத்திட்டன.

பிரதமர் Mark Carney, Alberta முதல்வர் Danielle Smith ஆகியோர் இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் British Columbia வழியாக எண்ணெய் குழாய் பாதைக்கு வழி வகுக்கிறது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

குறைந்த ஊதியம் பெறும் உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை வழங்கும் ஒப்பந்தம்!

Lankathas Pathmanathan

மேலும் பயண இடையூறுகள் சாத்தியம்: Air Canada

Lankathas Pathmanathan

ஹமாஸ் தலைவர்களுக்கு கனடா தடை

Lankathas Pathmanathan

Leave a Comment