தேசியம்
செய்திகள்

Dundas புகையிரத நிலையத்தில் கத்திக் குத்து!

Toronto போக்குவரத்து சபையின் ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் Dundas புகையிரத நிலையத்தில் நிகழ்ந்தது.

புதன்கிழமை (26) பிற்பகல் 1:10 மணியளவில் Dundas புகையிரத நிலையத்தில் TTC ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து Toronto காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கத்தியால் குத்தப்பட்ட TTC ஊழியரை கண்டுபிடித்ததாகவும், சம்பவ இடத்தில் ஒரு ஆண் சந்தேக நபரை கைது செய்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில் காமடைந்தவரும், சந்தேக நபரும்  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

Dundas நிலையத்தில் எங்கள் ஊழியர் ஒருவர் மீது நடந்த வன்முறை தாக்குதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம் என TTC தலைமை நிர்வாக அதிகாரி Mandeep Lali கூறினார்.

காயமடைந்த TTC ஊழியர் ஒரு வாடிக்கையாளர் சேவை முகவர் எனவும் அவர் கையில் குத்தப்பட்டதாகவும் அந்த ஊழியரை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LJI Reporter ரம்யா சேது

Related posts

250 வாக்குகளினால் வெற்றியை தவற விட்ட தமிழர்!

Gaya Raja

குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

Mississauga  நகர முதல்வர் இடைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Lankathas Pathmanathan

Leave a Comment